[X] Close >

காஞ்சிபுரம்: வெள்ளத்தில் சிக்கிய வாலிபரை லாவகமாக மீட்ட தீயணைப்புத்துறை

Fire-department-rescues-flood-victims-in-Kanchipuram

காஞ்சிபுரம் அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய வாலிபரை தீயணைப்புத்துறையினர் லாவகமாக மீட்டனர்.


Advertisement

நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. வேலூர் மாவட்டத்திலுள்ள பொன்னை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் மழை நீர் நிறம்பி வழிவதால் உபரிநீர் 40 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் நீர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் பாய்ந்து சென்று செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் அருகே கடலில் கலக்கிறது.

image


Advertisement

இந்நிலையில், வேலூரில் வெளியேற்றப்பட்ட நீர் காவேரிப்பாக்கம் பெரும்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் பாலாற்றை வந்தடைந்தது. பாலாற்றில் வெள்ள நீர் வருவதைக் காண ஏராளமான பொதுமக்கள் செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் அருகே திறண்டனர். இதனிடையே பாலாற்றின் பாலத்தின் கீழே குடித்துவிட்டு படுத்திருந்த வாலிபர் ஒருவரும், அங்கு மேய்ந்து கொண்டிருந்த 12 பசுமாடுகளும் வெள்ள நீரில் சிக்கி கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ள நீரில் சிக்கிய வாலிபரை லாவகமாக மீட்டனர். மேலும் 12 பசு மாடுகளையும் மீட்டனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close