ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிரிக்கெட் களத்தில் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் பிரபலம். குடும்பத்தோடு இணைந்து ஷார்ட் வீடியோக்களை ஷூட் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பகிருவார். பெரும்பாலும் இந்திய திரைப்பட பாடல்களுக்கு வார்னர் நடனம் ஆடுவது வழக்கம்.
அதற்காகவே அவரை பெருந்திரளான ரசிகர் கூட்டம் பின் தொடருவது உண்டு. அந்த வீடியோக்களும் லைக்ஸ்களையும், ஹார்டீன்களையும் அள்ளி தெளித்து அன்பை வெளிப்படுத்துவார்கள் ரசிகர்கள். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வார்னர் அது மாதிரியான வீடியோக்களை அதிகம் பகிர்ந்திருந்தார்.
A fine 50 for Warner too!
Live #AUSvIND: https://t.co/eSydQMj2PL pic.twitter.com/gCy9Qa6rBV — cricket.com.au (@cricketcomau) November 27, 2020
இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் பணியை கவனித்து வந்த வார்னர் திடீரென நடிகர் அல்லுஅர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ‘அலா வைகுந்தம் புரம்லோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘புட்ட பொம்மா’ பாடலின் டிரேட் மார்க் நடன அசைவுகளை ஆடி அசத்தினார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் குஷி அடைந்தனர்.
Warner Doing Butta Bomma ?#AlluArjun #Pushpa pic.twitter.com/POjyX9SONE — A R Y A (@Cult_Arya) November 27, 2020
வார்னர் இன்றைய ஆட்டத்தில் 69 ரன்களை குவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி