பொறியியல் படிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பயிலும் நடைமுறையை உருவாக்க மத்திய கல்வித் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது
இதற்காக நாடு முழுவதிலுமுள்ள ஐஐடி மற்றும் சில என்ஐடி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் நடைபெற்ற மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
இது குறித்து தி ப்ரிண்ட் பத்திரிகைக்கு பேசிய உயர் அதிகாரி ஒருவர், ஐஐடி பனராஸில் இந்தியில் பொறியியல் தொடங்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் அனைத்து ஐஐடி, ஏன் ஐடிகளிலும் அவரவர் தாய்மொழிகளில் பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்காக அனைத்து IIT, NIT, AICTE அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட மெயின்ஸ் தேர்வு 2021 முதல் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பொறியியல் படிப்பிலும் தாய்மொழி கற்றல் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
தாய்மொழி பொறியியல் என்பதால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமா? அதனை சமாளிக்கும் திட்டங்களை மத்திய அரசு வைத்துள்ளதா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அதற்கான பதில்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்