உளுந்தூர்பேட்டை அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் உளுந்தூர்பேட்டை - விருத்தாச்சலம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையின் இடையே நரியன்ஓடை பகுதியில் 100 மீட்டர் அளவில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நரியன்ஓடையில் வெள்ளப் பெருக்கெடுத்து தண்ணீர் வரும்போது இந்தப்பாலம் மூழ்கிவிடும்.
இந்த நிலையில் நிவர் புயலின் தாக்கம் காரணமாக நேற்று நள்ளிரவு மேட்டுக்குப்பம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வயல்வெளிப் பகுதிகளில் தேங்கிய தண்ணீர், நரியின் ஓடையை வந்து தரை பாலத்தை மூழ்கடித்தது. சுமார் 4 அடி உயரத்திற்கு இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் மெல்ல பெருக்கெடுத்து ஓடுவதால் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் மேட்டுக்குப்பம் ஆலடி, பாலக்கொல்லை, மணக்கொல்லை, உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மழையின் பொழுதும் இந்த நிலை நீடித்து வருவதால் மேட்டுக்குப்பம் நரியின்ஓடை தரை பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?