ஹோண்டா நிறுவனம், Honda Activa 6G என்ற புதிய வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது
கியர் மாற்ற வேண்டிய தேவையில்லை, குடும்பத்தில் ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் செளகர்யமாக எடுத்துச் செல்லலாம். பின்னால் அமர்பவர்களுக்கு பெரிய சீட் இருப்பதால் நீண்ட நேரம் சொகுசாக அமரலாம். முன்னால் பொருட்களை வைத்துக்கொள்வதற்கு ஏற்ப இட வசதி உண்டு. பிக்கப், சொகுசு என பலரின் விருப்பத்திற்கு ஏற்ற இரு சக்கர வாகனம் தான் ஹோண்டா ஆக்டிவா.
ஸ்கூட்டர் வகை என்றாலே பெண்களுக்குத்தான் என்ற நிலை மாறி இருபாலருக்குமான இரு சக்கர வாகனமாக உருவாக்கப்பட்டது ஆக்டிவா. ஆக்டிவா உருவாக்கப்பட்டு 20 வருடங்கள் முடிந்துவிட்டன. அதனை கொண்டாடும் விதமாக அடுத்தக்கட்ட வெர்ஷனை அறிமுகம் செய்கிறது ஹோண்டா. Honda Activa 6G என்ற வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ரூ.66316 முதல் ரூ.68316 (ex-showroom) வரை இதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கைக்கு வரும்போது ஆக்டிவா ரூ.70ஆயிரத்தை தாண்டும் என்றே தெரிகிறது.
இந்த விலை மாற்றம் ஆக்டிவாவின் பிரத்யேக பெயிண்ட் ஸ்டைல், மற்றும் விற்பனையாகும் இடத்தை பொருத்து மாறுகிறது. 109.5 CC எஞ்சின் கெபாசிட்டி, 7.68 bhp @ 8000 rpm பவர் என அசத்தலான பிக் அப்பிற்கு ஆக்டிவா 6G தயாராகவே உள்ளது. 45 Kmpl மைலேஜ், செல்ஃப் மற்றும் கிக்ஸ்டார்ட் வசதி என பல சிறப்பம்சங்களையும் ஆக்டிவா கொண்டுள்ளது. மேலும் புதிய மாடலில் சில அசத்தலான பெயிண்ட் ஃபினிஸிங்கையும் கொடுத்துள்ளனர்.
Honda Activa 6G குறித்து பேசியுள்ள ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் இயக்குநர் அட்சுசி ஒகாடா, ’’இந்தியாவுடைய கனவின் சக்தியை உணர்ந்த ஹோண்டா, ஆக்டிவாவை 20 வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. பயனாளர்களில் நம்பிக்கையையும், அன்பையும் பெற்ற ஆக்டிவா அடுத்தக்கட்டத்தில் கால் வைக்கிறது. இருபாலருக்குமான ஆக்டிவா 6G மாடலை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு