விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நிவர் புயிலின் காரணமாக பெய்த கனமழையினால் மழை நீரானது நெற்பயிரை மூழ்கடித்துள்ளது.
மரக்காணம் பகுதியில் உள்ள நாணக்கால்மேடு கிராமத்தில் சுமார் 72 ஏக்கருக்கு மேலான விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர் முழுவதும் மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
பயிரிடபட்ட நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். முழுவதும் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள கிராமம் இது. ஏரி மற்றும் கழுவெளி சதுப்பு நிலப்பகுதியில் நீர் நிரம்பியதன் காரணத்தினால் தான் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
“எங்களுக்கு வேறு வழியே இல்லை. குடும்பத்தோடு தற்கொலை தான் செய்தாகணும். திக்கு தெரியாம இருக்கோம்” என்கிறார் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர்.
“பயிர் காப்பீடு எல்லாம் போட்டு தான் வைத்துள்ளோம். ஆனால் அதில் ஒன்றும் எங்களுக்கு பெரிதாக கிடைக்காது. அறுவடை செய்தால் தான் எங்களுக்கு வருமானம். மற்றபடி பயிர் காப்பீடு செய்திருந்தாலும் அதில் கிடைப்பது நாங்கள் செய்து செலவுக்கு கூட ஈடாகாது. அது எங்களுக்கு போதுமானதாகவும் இருக்காது.
அரசாங்கம் எங்களுக்கு கலிங்கல் கட்டிக் கொடுத்தால் இது மாதிரியான வெல்ல பாதிப்பிலிருந்து நாங்கள் தப்பிப்போம்” என்றார் மற்றொரு விவசாயி. அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரமாக நம்பியுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு உதவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்