செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் காரணமாக ஆயிரத்து 300 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலுமாக தரையில் சாய்ந்து சேதமாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், சித்தாமூர் ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களில் சம்பா சாகுபடி, வெள்ளை பொன்னி ரக நெல் பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர். நிவர் புயல் பாண்டிச்சேரி அருகே அதிகாலை கரையை கடந்தபோது, கதிர் வந்த அந்த பயிர்களை புயல் சேதப்படுத்தியுள்ளது.
புயலால் இந்த பகுதிகளில் பலத்த காற்றும் பலத்த மழையும் பெய்தது. புயல் மற்றும் மழையினால் இந்த நெல்பயிர்கள் தண்டு உடைந்து தரையில் படுத்துவிட்டன. ஏக்கருக்கு 25லிருந்து 30 மூட்டை நெல் கிடைக்கக்கூடிய அந்த நெற்பயிர்கள், பால் கட்டும் நேரத்தில் தண்டு உடைந்ததால் தற்போது வைக்கோலுக்கு மட்டுமே பயன்படும். நெல் மூட்டைகள் தற்போது ஏக்கருக்கு 5 மூட்டைகூட கிடைக்காத சூழ்நிலை உள்ளது.
ஏக்கருக்கு 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவுசெய்த நெல்பயிர் தற்போது சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும்; காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ