கடலூர் அருகே உள்ள குண்டுஉப்பலவாடி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று காலை கரையை கடந்தது. இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் அருகே உள்ள குண்டுஉப்பலவாடி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
குறிப்பாக அழகப்ப நகர் முதல் தெரு, இரண்டாம் தெரு, சின்ராஜ் நகர்,சப்தகிரி தெரு, பெருமாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் சேதமடைந்தன. வீட்டிற்குள் தேங்கியிருக்கும் மழைநீரை மக்கள் வெளியேற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் போதெல்லாம் இதுபோல் வெள்ளநீர் தங்கள் வீடுகளை சூழ்ந்து விடுவதாகவும், வீட்டிலுள்ள பொருட்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வாக வடிகாலை முறையாக தூர்வாரி தங்கள் பகுதியில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்