தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரில் சுமார் 10ஆயிரம் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. தரைத்தளம் வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்
தீவிரப் புயலாகவும், அதி தீவிரப் புயலாகவும் வலுவடைந்து வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது 'நிவர்'. நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மூன்று மணி நேரம் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது இந்த புயல். அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர், தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இதற்கிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரு தினங்களாக கனமழை பெய்தது. மேலும் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீரும் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றங்கரையோர தாழ்வான பகுதியான முடிச்சூரில் வெள்ள நீர் தேங்கியுள்ளது
இதனால் தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதி என்பதால் குடியிருப்பு பகுதிகளை சுற்றி நீர் தேங்கியுள்ளது. சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
இதனால் அடிப்படை தேவைகளுக்குக் கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். இதற்கிடையே அதிகாரிகள் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் முடிச்சூர் பகுதி 3 முறை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி