நிவர் புயலின் காரணமாக கடலூர், விழுப்புரம் மரக்காணம் பகுதியில் அதீத கனமழை பெய்து வருகிறது.
‘நிவர்’ புயல்காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அதீத கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் அடுத்த அழகன் குப்பம் கிராமத்தில் இன்று இயல்பு நிலையை விட கடல் சீற்றம் அதிகரித்து உள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் சீற்றம் அதிகரித்ததால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும் போது “ அதிகாரிகள் பாதுகாப்பு மையத்தில் எங்களை தங்கவைக்காமல் விவசாயிகளை தங்கவைத்துள்ளனர். எங்களுக்கு கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மரக்காணத்தில் இடம் ஒதுக்கியிருக்கின்றனர். இது எங்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது” என்றனர்.
அதேபோல், கடலூர் மாவட்டத்திலும் அதீத கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக முக்கியமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மின்சாரம் பல இடங்களில் பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்டுள்ளது.
Loading More post
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
சாலையில் கிடந்த பையில் 15 பவுன் நகை...நேர்மையுடன் காவலரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!