[X] Close >

என்எல்சியில் நிலக்கரி வெட்டும் பணிகள் நிறுத்தம் - மின்உற்பத்தி பாதிக்காது என அறிவிப்பு

Nivar-cyclone--Stopping-of-coal-lignite-cutting-operations-at-NLC--informed-that-power-generation-will-not-be-affected

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெய்வேலி என்எல்சி சுரங்கப் பகுதியில் நிலக்கரி வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்று என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சுரங்கத்தில் நிவர் புயல் பாதிப்பு காரணமாக மழை நீர் சுரங்கப் பகுதியில் தேங்கும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலக்கரி வெட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.


Advertisement

மேலும் நிலக்கரி வெட்டும் இயந்திரம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி அனல்மின் நிலைய சேமிப்பு கிடங்கில் போதுமான அளவு கையிருப்பு இருப்பதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்று என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close