நிவர் புயலை அடுத்து தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில்,
''நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயம், புயல் காற்றின் வேகமானது மணிக்கு 145கிமீ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட தமிழக கடற்கரை மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாழ்வான பகுதி மற்றும் உறுதியற்ற வீடுகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறூம் அத்தியாவசிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதுபோல தேவையான மளிகைப்பொருட்கள், சுத்தமான குடிநீர் இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?