(கோப்புப் படம்)
விழுப்புரத்தில், தமிழக அரசு உத்தரவை மீறிய தனியார் பேருந்துகளை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்
நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று (நவம்பர் 25) இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்ய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு நேற்றே வெளியிடப்பட்டது. புயல் கரையை கடந்ததும் நிலையை ஆய்வு செய்த பின்னரே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
(கோப்புப் படம்)
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்தில் அரசு உத்தரவை மீறி தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை அடுத்து செஞ்சி காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துகளை கண்டித்து திருப்பி அனுப்பினர்.அரசு உத்தரவை மீறி பேருந்துகளை இயக்கினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.
செஞ்சி பகுதியில் நேற்று முதல் லேசான தூரல் இருந்து வந்த நிலையில் தற்போது மழை நீடித்து வருகிறது
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி