[X] Close >

காஞ்சிபுரம்: 7 முகாம்களில் மக்களை தங்க வைக்க ஏற்பாடு

Arrangements-have-been-made-to-accommodate-people-in-7-camps-in-Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள நீர் சூழும் அபாயம் இருக்கும் காரணத்தினால் தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த 40 குழந்தைகள் உட்பட 244 பேர் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் நிவர் புயலால் ஏற்படும் கனமழை காரணமாக பாதிப்படையக் கூடும் என முன்னெச்சரிக்கையாக கண்டறியப்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே மீட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரால் நேற்று முடுக்கி விடப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பகுதியிலுள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியிலும், சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தற்போது வரை ஏழு முகாம்களில் 104 குடும்பத்தினர் என 93 பெண்கள் 40 குழந்தைகள் உட்பட 244 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல இருக்க முன்னெச்சரிக்கை காரணமாக பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

image

இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி , ஆர்.டி.ஓ., முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு, உணவு உள்பட உரிய நிவாரண பொருட்களை வழங்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் ஒரே பகுதியில் அதிக மக்கள் ஒன்றுகூடி தங்க வைக்கப்பட்டு இருப்பதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அச்சம் இருப்பதாலும் அனைத்து சிறப்பு முகாம்களிலும் மருத்துவ குழுவினர் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் தனிமனித இடைவெளியுடன் அனைவரையும் தங்க வைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் ஒவ்வொரு முகாம்களிலும் மருத்துவ உபகரணங்களும் கை கழுவும் கிருமினாசினியும் வைக்கப்பட்டுள்ளன அதேபோல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காய்ச்சல் இருமல் சளி போன்றவை இருக்கிறதா என்பதை கண்டறியும் மருத்துவ குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close