சென்னை வண்ணாரப்பேட்டையில் 13வயது சிறுமி கூட்டு பாலியல் செய்யப்பட்ட நிகழ்வில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில் “இது பயங்கரமான செயல். குற்றவாளிகள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் எந்தப் பதவியில் இருக்கிறார்கள், அவர் எந்தத் துறையில் பணிபுரிகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், குற்றவாளிகள் எந்த இரக்கமும் இன்றி தண்டிக்கப்பட வேண்டும். நீதி தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். அந்த குழந்தைக்கு நமது ஆதரவு தேவை” என தெரிவித்துள்ளார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமையான நிகழ்வுக்கு பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்