வங்க கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’புயல் காரணமாக நாளை அரசு பொதுவிடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல் பங்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களும் நாளை இயங்கும். அதே சமயத்தில் நாளை புயலினை எதிர்கொள்ளும் மாவட்டங்களான கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
புயல் கரையை கடந்த பிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல விற்பனை நடைபெறும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
சாலையில் கிடந்த பையில் 15 பவுன் நகை...நேர்மையுடன் காவலரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!