நிவர் புயல் அச்சத்தின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே விவசாயி ஒருவர் தனது வீட்டின் மேல் வேயப்பட்டிருந்த ஓடுகளை பிரித்து தரையில் அடுக்கி வைத்த நிகழ்வு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் புயலால் வீடுகள் சேதம் அடையாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் கடும் துயருக்கு உள்ளாகியுள்ள புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நிவர் புயலை நினைத்து கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
புயல் ஒருவேளை புதுக்கோட்டை மாவட்டத்தில் வீசினால் மீண்டும் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், ஏற்கனவே கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் 9 பேர் உயிரிழந்ததோடு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அது மட்டுமின்றி பல லட்சக்கணக்கான மரங்கள் காற்றின் வேகத்தில் வேரோடு மண்ணில் சாய்ந்ததால் அந்த வேதனையில் இருந்து இம்மாவட்ட மக்கள் இன்னும் மீளவில்லை என்றும் வேதனையோடு கூறுகின்றனர் புதுக்கோட்டை மாவட்ட மக்கள்.
இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயலால் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்களது வீடுகளை பாதுகாக்கும் பணிகளில் பல்வேறு விதமாக ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் அருகே உள்ள மரக் கிளைகளை வெட்டும் பணியிலும், காற்றின் வேகத்தில் சாயும் மரங்களையும் வெட்ட வேண்டிய சூழலிலும், கீற்றுக் கொட்டகை வீடுகளின் மேல் தார் பாய்களை அமைக்கும் பணியிலும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி நிவர் புயல் அச்சத்தின் காரணமாக தனது வீட்டில் மேல் இருந்த ஓடுகளை ஆட்களை வைத்து பிரித்து கீழே இறங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “பெரிய அளவில் இருந்த தனது ஒட்டுவிடு கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் காற்றின் வேகத்தில் சூறையாடப்பட்டு 500க்கும் மேற்பட்ட ஓடுகள் உடைந்து நாசமானது என்றும், அதுமட்டுமின்றி வீடும் கடுமையாக சேதம் அடைந்ததாகவும், அதன் பின்பு எஞ்சிய ஓடுகளை வைத்து அருகிலேயே இருந்த சமையல் கொட்டகையை சரிசெய்து அங்குதான் தற்போது வசித்து வருவதாகவும், இந்நிலையில் மீண்டும் புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் தாக்கும் என தகவல்கள் பரவி வருவதால் தற்போது தனது வீட்டில் இருந்த ஓடுகளை ஆட்களை வைத்து பிரித்து கீழே இறக்கி பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பே இதற்கு காரணம் என்றும் வேதனையோடு கூறினார்.
மேலும், அவர் கூறுகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை வைத்துக்கொண்டு சமையல் கொட்டகையில் தான் தற்போது வசித்து வருவதாகவும் ஆனால் அரசு கஜா புயலால் சேதமடைந்த தனது வீட்டுக்கு மாற்றாக இதுவரையில் புதிய வீடு கட்டித் தரவில்லை என்றும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து இனியாவது வீடு கட்டித்தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
Loading More post
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
‘சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ - விக்டோரியா மருத்துமனை
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!