[X] Close >

விடாது பெய்யும் மழை... போக்குவரத்து நெரிசலால் திணறும் சென்னை மாநகரம்

நிவர் புயல் காரணமான பெய்து வரும் தொடர்மழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Advertisement

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது 5 கிமீ வேகத்தில் பாண்டிச்சேரி நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது.


Advertisement

கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், எழும்பூர், வெப்பேரி, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, ராயப்பேட்டை, 1000 விளக்கு போன்ற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் மழைத்தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் அங்கும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அலுவலகத்திலிருந்து செல்பவர்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதால், பல்வேறு இடங்களில் தொடர் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3200 போக்குவரத்து போலீஸார் இந்த பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அதுமட்டுமல்லாமல், எங்கெல்லாம் மழைத்தண்ணீர் தேங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் மாநகராட்சி ஊழியர்களுடன் காவல்துறையினரும் சேர்ந்து மழைத்தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close