[X] Close >

கஜா, ஒகி, வர்தா கற்றுக்கொடுத்த பாடம்... நிவர் புயலுக்கு நெட்டிசன்கள் ரெஸ்பான்ஸ் என்ன?!

The-lesson-taught-by-Gaja--Oki--Warda-cyclones--What-is-the-Netizens-response-to-the-Nivar-cyclone--

நிவர் புயல் குறித்த ஹேஷ்டேக்குகள் நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகின்றன. #NivarCyclone, #CycloneChennai போன்ற ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டித்தனர். சிலர் வழக்கம்போல மீம்ஸ்கள் போட்டு புயலை வரவேற்றுக்கொண்டிருக்க, `நாங்களாம் புயல் காத்துலையே சேர் போட்டு சுண்டல் சாப்டுவோம்' என்று சிலர் பஞ்ச் வசனங்களை தெறிக்கவிட்டிருந்தனர்.


Advertisement

image

நிவர் புயல் தமிழகத்தை அச்சம் அடைய வைத்திருக்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்து வரும் மழை கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயலாக மாறி 'நிவர்' நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

புயல் காரணமாக மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதிதீவிர புயலாக மாறியுள்ளதால் நிலைமையை தீவிரமாக கண்காணிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை காலை 10 மணிமுதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும், இருமார்க்கத்திலும் இயக்கப்படும் 24 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

image


Advertisement

நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

நிலைமை இப்படி இருக்க, நிவர் புயல் குறித்த ஹேஷ்டேக்குகள் நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டன. #NivarCyclone, #CycloneChennai போன்ற ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டித்தனர். சிலர் வழக்கம்போல மீம்ஸ்கள் போட்டு புயலை வரவேற்றுக்கொண்டிருக்க, `நாங்களாம் புயல் காத்துலையே சேர் போட்டு சுண்டல் சாப்டுவோம்' என்று சிலர் பஞ்ச் வசனங்களை தெறிக்கவிட்டிருந்தனர். இன்னும் சிலரோ, 2020-ல் நடந்த சம்பவங்களையும், நிவர் புயலையும் மையப்படுத்தி 2020 க்ளைமேக்ஸ் வந்துவிட்டது என்று வடிவேலு தோரணையில் ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

புயல் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்பட்ட ஏழு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டச் சேர்ந்தவர்கள், `புயலை வந்து பார்' என்கிற ரேஞ்சுக்கு பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ, ``வருஷத்த தொடங்கி வைப்பது வேணுமா நீயா இருக்கலாம். ஆனா முடிக்கிறது நாங்கதான்" என கொரோனாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். இதுபோக இன்னொரு குரூப், சென்னையில் நிலவி வரும் குளிர் கிளைமேட்டை ரசித்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.

image

காமெடி, மீம்ஸ்களை தாண்டி மக்கள் விழிப்புணர்வு பதிவுகளைத்தான் அதிகம் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தை கடந்த சில ஆண்டுகளாக தாக்கிய கஜா, ஒகி, வர்தா புயல்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தால் அதிக விழிப்புணர்வு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், மக்களுக்கு தேவையான உணவு, நீர் போன்ற உதவிகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து, அதற்கான தகவல்களையும் முன்கூட்டியே பதிவிட்டு வருகின்றனர். சிலர் அரசின் உதவி எண்களையும் பகிர்ந்து வருகின்றனர்.சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால்களில் தேங்கியுள்ள குப்பைகளை முன்கூட்டியே அள்ளி வருவதையும், அதற்கான தகவல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

image

தமிழகத்தை கடந்த சில ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன. 2016 டிசம்பரில் வந்த வர்தா புயல் சென்னையை சீரழித்துச் சென்றது.2017-ல் உருவான ஒக்கி புயல், தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டது. இதில் இருந்தே அந்த மக்கள் இன்னும் மீளவில்லை. இதற்கு ஆண்டே கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உலுக்கியது. இப்படி ஆண்டுதோறும் தமிழகம் எதாவது ஒரு புயலால் தாக்கத்தை சந்தித்து வருகிறது. அந்தவகையில் இந்த நிவர் புயல் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. எதுவானாலும் எச்சரிக்கையாக இருபிப்போம் மக்களே.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close