நிவர் புயல் அச்சத்தின் காரணமாக மக்கள், அரிசி,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் குவிந்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடைகளில் மெழுகுவர்த்தி கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
நிவர் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் புயலின் பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரிசி, காய்கறிகள்,மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேகரித்து வைப்பதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் அதிக அளவு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு முதலே மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி பாக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதால் இன்று மெழுகுவர்த்தி கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு கடையின் உரிமையாளர்கள் அதிக விலைக்கு மெழுகுவர்த்திகளை விற்பனை செய்வதால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மெழுகுவர்த்தி தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்து அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்