நெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை சுத்தமல்லியில் தனது இரண்டு மகன்களை காவல்துறையினர் காரணம் இன்றி விசாரணைக்கு அழைத்து சென்றதாககூறி போலீசார் முன்னிலையிலேயே தாய் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சுத்தமல்லி சத்தியாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது கணவர் தர்மராஜ். இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் பிரசாந்த், பிரதீப் என்ற மகன்களும் உடன் உள்ளனர் . இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா ஊரடங்கின்போது பிரதீப் எதிர் வீட்டில் உள்ள பெண்னை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போதுதான் வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சுத்தமல்லி போலீசார் சத்தியா நகர் பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பீரதீப் வீட்டுக்கு சென்று விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்து சென்றுள்ளனர் . அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் எந்த காரணமும் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரது அண்ணன் பிரசாந்தையும் விசாரணைக்கு எந்தவித காரணமும் இல்லாமல் அழைத்துள்ளனர் . இதனை தாய் சகுந்தலா தட்டிக்கேட்டுள்ளார். அப்போது காவலர்கள் சகுந்தலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி காவலர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் . இதனைப்பார்த்த காவலர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார் . ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார் . பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
''கடந்த 03-11-20 அன்று நடந்த ஒரு திருட்டு வழக்கில் பிரதீப் குற்றவாளியாக வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய லேப்டாப் ஒன்று பிரதீப் வீட்டில் உள்ளது. அதனை பறிமுதல் செய்ய சென்றபோது அவரின் தாய் வீட்டின் கதவுகளை மூடிவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் அவரது மூத்த மகன், அவரது சகோதரர் ஆகியோர் உடன் இருந்தனர். இதுதான் அங்கு நடந்த சம்பவம். மேலும் அங்கு நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்