கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே பூட்டப்பட்ட வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே சாமிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ் ஸ்டீபன்ஸ். இவரது மகன் வெளிநாட்டில் இருந்து சென்னை வருவதையொட்டி மகனை அழைத்து வருவதற்காக, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு கடந்த வியாழனன்று சென்னைக்கு சென்றுள்ளார். அதன்பின் ஊர் திரும்பிய அவர், வீட்டை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் அறைகளுக்குள் இருந்த பீரோ திறந்திருந்ததோடு அதனுள் வைத்திருந்த பொருட்கள் வெளியே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து உடனே தக்கலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததோடு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த வெள்ளியன்று நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டின் பின்புறம் வழியாக தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பூட்டப்பட்டிருந்த வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தக்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்