புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது. உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு இலவச சிகிச்சை அளித்து பேருதவி புரிந்திருக்கிறார், திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்.
அதன்பிறகு, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிடோர் உதவினார்கள். அவர்களையடுத்து, நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்கள். ரோபோ ஷங்கர் தவசியை சந்தித்து “உங்கள் புகைப்படத்தைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. மன உறுதியோடு இருங்கள். உங்கள் மீசையைப் பழையப்படி பார்க்கவேண்டும். ஐ ஆம் ஃபேக் சொல்லுங்க” என்று நம்பிக்கையூட்டினார்.
இந்நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் அப்பாவாக தவசியின் 'கருப்பன் குசும்புக்காரன்' காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தற்போது, உணவுக்குழாய் புற்றுநோயோடு போராடும் தவசி தெற்கத்தி உடல்வாகும், முறுக்கிய மீசையுமாய் அந்த மண்ணுக்குரிய மொழியோடு திரையில் தோன்றுவது தமிழ் சினிமாவின் எல்லா ரசிகர்களுக்கும் பரிச்சயம்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்