கடங்கநேரியில் மது குடிக்க அழைத்து சென்று வாலிபர் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கிராமத்தில் பதற்றம் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள கடங்கநேரியை சேர்ந்தவர் ஆனைக்குட்டி என்பவரின் 3வது மகன் சிவன்ராஜ் (23). பனை தொழிலாளியான இவர் நேற்று மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர்களான செல்வக்குமார், ராஜா, கனகராஜ் ஆகியோர், சிவன்ராஜை மது குடிக்க அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு நீண்டநேரமாகியும் சிவன்ராஜ் வீட்டிற்கு வரததால் அவரது பெற்றோர் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் சிவன்ராஜ் கிராமத்து வயல்வெளியில் உள்ள கிணற்றின் அருகே வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு சிவன்ராஜ் சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட சிவன்ராஜின் கால் பகுதியில் பலத்த வெட்டுகாயங்களும், தலையின் பின்பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடங்கநேரியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராமத்தில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்திரவின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி