JUST IN

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு, தீவைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை கண்டித்து, அரசு பேருந்துகள் மீது அப்பகுதி மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தியதால் நள்ளிரவில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, தங்கச்சிமடம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்றவர் மீது எதிரபாராதவிதமாக மோதியது. அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டுநரை கைது செய்யக்கோரி ராமேஸ்வரம் மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய அவர்கள், ஒரு பேருந்தை தீயிட்டு கொளுத்தினர். தகவலறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அங்கு சென்ற போலீஸார், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா, முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

வீடியோ

Advertisement: