[X] Close >

நாளை தீவிர புயலாக நிவர் வலுப்பெறும் - 110 கி.மீ வேகத்தில் காற்றுவீசும்

Nivar-cyclone-will-get-stronger-and-wind-speed-in-110-km-per-hour

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.


Advertisement

நிவர் புயல் வரும் 25-ஆம் தேதி தீவிரப்புயலாக மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. புயல் குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து புயல் குறித்த தகவல்களை தெரிவித்தார். அவர், “வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 25 பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். சென்னையில் 24, 25 ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், தாஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.


Advertisement

520கி.மீ தொலைவில் நிவர் புயல் : மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து 

ஒரு சில இடங்களில் அதிகன மழை பெய்யக்கூடும்; மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும் போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25 ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் 55-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. 24, 25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close