21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வீரர் உடல் அடக்கம்

Bury-the-soldier-body-with-military-honors-to-detonate-21-bullets

காஷ்மீரின் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல், 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான கருப்பசாமி, கடந்த 19ஆம் தேதி காஷ்மீர் லடாக் பகுதியில், வாகனத்தில் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல், ஹரியானா எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு கருப்பசாமியின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல், சொந்த ஊரான தெற்கு திட்டங்குளத்துக்கு கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த வீரரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement