புயல் அறிவிப்பு எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய டெல்டா மக்கள்.!

Delta-people-doing-preventive-measures-of-cyclone

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 25ஆம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.


Advertisement

image

இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. நிவர் புயலானது, நவம்பர் 25ல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


Advertisement

image

இதற்கிடையே நிவர் புயல் அறிவிப்பை அடுத்து டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஜா புயலால் அதிக பாதிப்பைக்கண்ட வேதாரண்யம் பகுதியில் நிவர் புயலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டி பாதுகாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அதிக அச்சத்தால் சிலர் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை கழட்டியும் வைத்துள்ளனர்.

image


Advertisement

கடந்த புயலில் முன்னெச்சரிக்கை இல்லாமல் பல தென்னை மரங்களை இழக்க நேரிட்டதால் இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் வானிலை மையம் அறிவிப்பின்படி, புயலானது, நவம்பர் 25ல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement