வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும் சிறப்பு முகாம்

Special-camp-today-to-add-name-to-voter-list

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையான இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 


Advertisement

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டிருந்தார்.

அதன்படி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்துகொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


Advertisement

டிசம்பர் 12, 13ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement