சென்னையில் அமித் ஷா.. கனமழை எச்சரிக்கை.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக செய்தது என்ன என்பதை விவாதிக்க தயாரா என அமித் ஷா சவால்.


Advertisement

அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். சென்னையில் அமித் ஷா பங்கேற்ற அரசு விழாவில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தின் நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை. அமித் ஷா நவீன சாணக்கியர் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்.


Advertisement

மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு.கல்விக் கட்டணத்திலும் திமுக அரசியல் செய்வதாக விமர்சனம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க திமுகவே காரணம். முன்பே அறிவிக்காதது ஏன் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரம் அவருக்கும், ஆளுநருக்கும் இடையேயானது. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்


Advertisement

நாகையில் மீனவர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கைதாகி விடுதலை. மயிலாடுதுறை வருகையின் போது, தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்றார்.

அரியர்ஸ் மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்பட்டத்தில் எந்த விதிமீறலும் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்.

Related Tags : top newsheadlinesamithshaindiatamilnadurainமழைசென்னை
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement