சோனுசூட்டின் வெறித்தனமான ஜிம் பிராக்டிஸ்; ’வாவ்’ சொல்ல வைக்கும் வைரல் வீடியோ!

Sonus--gym-practice--Viral-video

நடிகர் சோனுசூட் ஜிம்மில் பயிற்சி பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


Advertisement

பொதுவாகவே ஹீரோக்கள் தங்களை இளமையாக வைத்துக்கொள்ள தொடர்ச்சியாக ஜிம்முக்கு செல்வது வழக்கம். ஆனால், அவர்களைவிட வில்லன் நடிகர்கள்தான் உடல் கட்டமைப்பை ஃபிட்னஸாக வைத்திருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனென்றால், வில்லன் என்றாலே மிரட்டும் உடல் அமைப்போடு ஹீரோவுடன் சண்டையிடவேண்டும். அதனைத்தான், பொதுமக்கள் ரசிக்கிறார்கள். ஹீரோக்களுக்கு சமமானவர் என்பதால் வில்லன் உடல் அமைப்பு என்பது மிகவும் அவசியமானது. அப்படி, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வில்லன் நடிகர்களில் சோனு சூட் முக்கியமானவர்.

சமீபத்தில்தான் இவரும் சரத்குமாரும் ஜிம்மில் பயிற்சி பெரும் புகைப்படங்கள் வைரல் ஆகின. இந்நிலையில், சோனு சூட் ஜிம்மில் கம்பியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு பக்கவாட்டின் மேலே 20 செகெண்ட்ஸ் வரை காலை மேலே தூக்கி அப்படியே வைத்து பார்ப்பவர்களை ஆச்சர்யத்தோடு மிரளவைக்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

image


Advertisement

கொரோனாவால் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடைப்பட்டன. இந்நிலையில் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டார், நடிகர் சோனுசூட். அதனையோட்டி உதவிக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, ரஷ்யாவில் தவித்து வந்த மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் இந்தியா அழைத்து வந்தது என்று அவரது சேவைகளின் பட்டியல் நீண்டுகொண்டேச் செல்கிறது.

தற்போது, சோனு சூட் ஹைதராபாத்தில் ஆச்சார்யா பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement