நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாநாடு’. அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஈஸ்வரன் படத்தை முடித்த நடிகர் சிலம்பரசன் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ‘சுற்றிலும் களேபரங்கள் நடந்துகொண்டிருக்க நடிகர் சிலம்பரசன் அமைதியாக தொழுகை செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மாநாடு படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நெற்றிப் பொட்டில் குண்டுடன், தலையிலிருந்து ரத்தம் வழிய சிலம்பரசன் தொழுகை செய்வது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ’அப்துல் காலிக்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.#MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/Xb4By0DRoS
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020Advertisement
மாநாடு படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணியாற்றியுள்ள நிலையில், இசையமைப்பாளராக யுவன் பணியாற்றி வருகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார்.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை