இன்றைய இணைய உலகில் OTT தளங்களில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் நெட்ப்ளிக்ஸும் ஒன்று. வெப் சீரிஸ், திரைப்படம் என பொழுதை இனிதாக கழிக்க இதில் ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. அதற்காகவே பெருவாரியான பயனர்கள் நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்தும் உள்ளனர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தின் சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
“புதிய பார்வையாளர்களை கவரும் வகையில் ஒரு புதுமையான முயற்சியாக இதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எங்களிடம் உள்ள அற்புதமான கதைகள், எங்களது சேவை மற்றும் அதன் பயன்பாடு முதலியவற்றை அவர்கள் அறிந்து கொள்ள உதவும். அதே சமயத்தில் புதிய வாடிக்கையாளர்களை எங்கள் தளத்தில் SIGN UP செய்யவும் உதவும்” என கடந்த அக்டோபர் மாதம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் CHIEF PRODUCT OFFICER கிரெக் பீட்டர்ஸ் சொல்லியிருந்தார். ஸ்ட்ரீம் திருவிழா என்ற பெயரில் இந்திய மக்களுக்கென பிரத்யேகமாக இந்த சேவையை கொண்டு வந்திருப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
அதை நிரூபிக்கும் வகையில் வார இறுதி நாளான டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்த இலவச சேவை வழங்கப்பட உள்ளதாக தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சேவை இந்தியாவிலிருந்து முதன்முதலாக ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதை பயன்படுத்த விரும்புவர்கள் netflix.com/StreamFest என்ற இணைய முகவரியில் தங்களது பெயர், இமெயில் முகவரி அல்லது மொபைல் எண்ணை கொண்டு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் எந்த நெட்ப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.
டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ5, அமேசான் பிரைம் என இந்தியாவில் உள்ள போட்டியாளர்களை சமாளிக்க நெட்ப்ளிக்ஸ் இந்த சேவையை அறிமுகம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?