டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா!

India-lose-no-1-spot-in-ICC-test-rankings

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி இப்போது இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.


Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விதிகளை ஐ.சி.சி மாற்றியுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை வரை முதலிடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி இப்போது இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. அதே நேரத்தில், இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி இப்போது முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

image


Advertisement

ஐ.சி.சி இப்போது வெற்றி சதவீதத்தை புள்ளிகள் அட்டவணையாக அல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தரவரிசையின் அடிப்படையாக ஆக்கியுள்ளது. இதன் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும் அணி, இப்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும். அதன்படி இந்தியா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டும், ஆஸ்திரேலியா முதலிடத்துக்கும் முன்னேறியது.

image

இதன் அடிப்படையில் இந்தியாவின் வெற்றி சதவீதம் 75 ஆகவும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 82.22 ஆகவும் இருக்கிறது. இந்த மாறுதலுக்கு முன்பு இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளிலும் இருந்தது. இந்த ஐ.சி.சி விதியைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் வரவிருக்கும் டெஸ்ட் தொடர் முக்கியமானதாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement