கோலி இல்லையென்றால் அவர் இடத்தில் யாரை களமிறக்குவீர்கள்? - ரிக்கி பாண்டிங்

who-will-bat-at-four-when-Virat-Kohli-goes-asks-Ricky-Ponting

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 4-ஆம் இடத்தில் யாரை களமிறக்குவீர்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

கோலி - அனுஷ்கா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவரால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என பிசிசிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதனையடுத்து கோலிக்கு பதிலாக எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் இது குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார் "கோலி விளையாடாத 3 போட்டிகளிலும் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்ஸி இல்லாமல் போனதன் அழுத்தத்தை இந்திய அணி நிச்சயம் உணரும். அது அணியிலுள்ள பல வீரா்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். கேப்டன் பொறுப்பை ரஹானேவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவருக்கான அழுத்தம் அதிகரிக்கும்" என்றார்.

மேலும் "பேட்டிங் வரிசையில் முக்கியமானதாக இருக்கும் 4-ஆவது இடத்தில் விளையாடுவதற்கு பொருத்தமான வீரரை தோ்வு செய்ய வேண்டும்.இது இந்திய அணியில் தெளிவில்லாத நிலையை ஏற்படுத்தலாம். இப்போது முதல் டெஸ்டுக்கான பேட்டிங் ஆா்டரை தேர்வு செய்வதிலும் குழப்பம் இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் வில் புக்கோவ்ஸ்கி, ஜோ பா்ன்ஸ் ஆகியோரில் யாரை களமிறக்குவது என்ற குழப்பம் இருப்பதுபோல், இந்திய அணிக்கும் பல்வேறு குழப்பங்கள் இருக்கும்" என்றார் ரிக்கி பாண்டிங்.

image


Advertisement

தொடர்ந்து பேசிய அவர் "பவுலிங்கில் ஷமி, பும்ரா, இஷாந்த், உமேஷ், நவ்தீப், சிராஜ் என பல தோ்வுகள் இருப்பதால் இந்தக் குழப்பம் இருக்காது. அடிலெய்டில் நடைபெறும் பகலிரவு டெஸ்டுக்கு எந்த சுழற்பந்துவீச்சாளா்களை தோ்வு செய்வது எனவும் இந்திய அணி முடிவு செய்ய வேண்டியுள்ளது" என கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement