ஜிகா வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜிகா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜிகா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் அருகே ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, 20 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கபுரம், ஏத்தகிணறு, பிலிகுண்லு, சீங்கோட்டை, நாட்றாம்பாளையம், புதூர் உள்ளிட்ட 50க்கும் அதிகமான கிராமங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில், புதூரைச் சேர்ந்த, மாயாருத்திரன் என்பவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து விட்டாலும், முன்னெச்சரிக்கையாக 20 பேர் கொண்ட 8 மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவக்குழு நாட்றாம்பாளையம் கிராமத்தை மையமாக வைத்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், கை, கால், தலைவலி பாதிப்புகள் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement