“கொரோனா அபாயம் இன்னும் முடியவில்லை” - எச்சரிக்கும் ஸ்ருதிஹாசன்!

Corona-still-cant--warn-shruti-haasan

கொரோனா அபாயம் இன்னும் முடியவில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை செய்து பதிவிட்டுள்ளார்.


Advertisement

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பரவத்தொடங்கி கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் பரவியது. இதனால், ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கிப்போயினர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

image


Advertisement

தற்போது ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“கொரோனாவால் அனைவருக்கும் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் கொரோனா முடிந்துவிடவில்லை. விதிமுறைகள் பின்பற்றாவிட்டால், ஒரு நடிகராகவும் ஒரு நபராகவும் எனது பாதுகாப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்க எனக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement