பீகார் மாநிலத் தேர்தலிலும், பிற மாநில இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்வியை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் தனது அறிக்கையில் "பீகார் மற்றும் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நான் அதிகம் கவலைப்படுகிறேன். இந்த முடிவுகள் மூலமாக களத்தில் கட்சிக்கு எந்தவொரு அமைப்பு வலிமையும் இல்லை அல்லது கட்சி கணிசமாக பலவீனமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "பீகாரில், ஆர்ஜேடி-காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு மிக நெருக்கமாக இருந்தபோதிலும் நாம் ஏன் தோற்றோம் என்பதுபற்றிய விரிவான மறுஆய்வு தேவை. நினைவில் கொள்ளுங்கள், சில காலத்திற்கு முன்புகூட காங்கிரஸ் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்றது " எனக்கூறியுள்ள அவர் களத்தில் கட்சியின் அமைப்பு வலிமையை அறியவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 23 பேர் எழுதிய கடிதம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, சமீபத்திய தேர்தல் படுதோல்விகளுக்கு பின்னர் ப.சிதம்பரம் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ராகுல் காந்திக்கு நெருக்கமான கட்சி செயற்பாட்டாளர்கள் பற்றியும், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜி 23 உறுப்பினர்கள் கலந்துரையாடினர். கட்சியின் சறுக்கல் பற்றி விவாதிக்க சி.டபிள்யூ.சி போன்ற கட்சி குழுவின் சிறப்பு அமர்வுக்கு இந்த முகாம் கேட்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபற்றி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி "சில தலைவர்கள் காங்கிரஸ் தங்களுக்கு சரியான கட்சி அல்ல என்று நினைத்தால், அவர்கள் ஒரு புதிய கட்சியை அமைக்கலாம் அல்லது முற்போக்கானவர்கள் என்று நினைக்கும் வேறு எந்த கட்சியிலும் சேரலாம் மற்றும் அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப காங்கிரஸின் நம்பகத்தன்மையை அழிக்கக்கூடிய இதுபோன்ற சங்கடமான செயல்களில் ஈடுபடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?