நாமக்கல்லில் கால்நடை மொத்த மருந்து விற்பனையாளர் வீட்டில் நேற்று நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 60 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். நாமக்கல் போலீசார் இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள முல்லை நகரில் ராதாகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருந்து மொத்த விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு 6 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 வீட்டுப் பணிப் பெண்களை கட்டிப்போட்டு மற்ற அறைகளின் கதவுகளை வெளிப்புறமாக தாழிட்டு விட்டு ராதாகிருஷ்ணன் மனைவி கீதா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்றுள்ளனர். பின்பு அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 60 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் நாமக்கல் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!