7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட, 14 வயதான சீன சிறுவன் “உலகின் மிக உயரமான இளைஞன்” என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
14 வயது சீன சிறுவன், ரென் கியூ, 7 அடி 3.02 அங்குலமாக வளர்ந்துள்ளார். இதற்காக அவர் “உலகின் மிக உயரமான இளைஞன்” என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ரென்கியூ சிறுவயதில் மிக உயரமாக வளர்ந்தபோது அவனின் பெற்றோர் பயத்துடன் மருத்துவர்களை அணுகியபோது, அவனுடைய மருத்துவ பரிசோதனை இயல்பாக இருந்தது என தெரிவிக்கின்றனர். ரெனினின் வீட்டில் அவனது பாட்டி 175 செ.மீ உயரமும், அவனது தாய் மற்றும் தாத்தா 190 செ.மீ உயரமும், அப்பா 180 செ.மீ உயரமும் வளர்ந்துள்ளனர் என்றும் கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ரெனினின் வீடு மற்றும் பள்ளியில் உள்ள மேசைகள் மற்றும் நாற்காலிகள் அவரது உயரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. உயரத்தில் முந்தைய சாதனை படைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிராட்போர்டு ஆவார், அவர் தனது டீனேஜ் ஆண்டுகளில் ரெனை விட 5 செ.மீ குறைவாக வளர்ந்திருந்தார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?