செய்தியாளர் சந்திப்பின் போது பெருமை பேசுகிறீர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்திய நிருபரிடம் ஆவேசமாக பதிலளித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
முதல்வர் பழனிச்சாமி இன்று நிருபர்களுக்குக் கொடுத்த பேட்டியில் நீட் தேர்வு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 10,11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் குறித்த பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது நீட் தேர்வில் தமிழக அரசு மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு பற்றி முதல்வர் விளக்கிக்கொண்டிருக்கையில், ஒரு நிருபர் நீட் தேர்வுக்கு 7.5% ஒதுக்கீடு அளித்ததைக் குறித்து தமிழக அரசு பெருமை பேசுகிறது என்றுக் கூறியதைக் கேட்டு முதல்வர் ஆவேசமடைந்தார்.
பெருமை என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி சரியான கேள்வியை கேட்கவேண்டும் என்று கூறிய முதல்வர், ’’பெருமை பேசுகிறேன் என்று தவறான வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசுப் பள்ளிகளிலிருந்து எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்ற கணக்கு தெரியுமா? பெருமை பேசுகிறேன் என்று சொல்லாதீர்கள். நான் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். ஏழை, எளிய மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் முதல்வர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி