த்ரில் காட்சிகள்... அசத்தும் நயன்... வெளியானது 'நெற்றிக்கண்' டீஸர்!

Intimidating-Nayan-as-a-disabled-person---Released-is-the-teaser-of-the-movie-netrikann

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.


Advertisement

நயன்தாரா தொடர்ச்சியாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் தற்போது தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். பார்வைச் சவால் காதாபாத்திரத்திரல் நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.


Advertisement

இப்படத்தை நடிகர் சித்தார்த்-ஆண்டிரியா நடிப்பில் வெளியான “அவள்” படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மெரினா படத்திற்கு இசையமைத்த கிரிஷ் கோபாலக்கிருஷ்ணன் இசையமைக்கிறார்.

நயன்தாராவின் 65-ஆவது படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. த்ரில்லர் ரகத்திலான இந்த டீஸரில் நயன்தாராவின் நடிப்பும் காட்சிகளும் மிரட்டுகின்றன. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement