கெளதம் மேனன்-சூர்யா-பி.சி.ஸ்ரீராம் கூட்டணி: ஓடிடி தளத்திற்காக இணையும் ஜாம்பவான்கள்

Gautham-Menon-and-Surya-joins-PCSriram-for-OTT

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார். 


Advertisement

image

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வெளியான படம் 'சூரரைப் போற்று'.ஏர்.டெக்கான் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூரரைப்போற்று படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டியராஜனுடன் ஒரு படம், வெற்றிமாறனனுடன் “வாடிவாசல்” உள்ளிட்டப் படங்களில் நடிக்க இருக்கிறார்.


Advertisement

இதனிடையே ஓடிடி தளத்திற்காகவும் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த சூர்யா அந்தத்தகவலை உறுதி செய்ததுடன், அப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பி சி ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கிற்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பதாக கூறினார். இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் “ கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வெப் பிலிம் ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்கிறேன். இன்றைக்கு செட் செம புத்துணர்ச்சியுடன் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கெளதம் மேனன் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement