கேரள உணவகமான மகாபெல்லியின் உரிமையாளர்களிடம் ஏற்கெனவே கோரிக்கை வைத்தும், உணவுப் பொட்டலங்களிலிருந்து கடவுள் படங்களை அகற்றத் தவறிவிட்டதாக மனுதாரர் பி.கே.டி நம்பியார் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லியில் பிரபலமான கேரள உணவகம் மகாபெல்லிக்கு, இந்து தெய்வங்களின் படங்களை உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தியது தொடர்பாக மத உணர்வுகளை புண்படுத்தியதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பி.கே.டி நம்பியார் என்பவர், தெற்கு டெல்லியின் சாகேட், மந்திர் மார்க்கில் உள்ள மகாபெல்லி என்ற உணவகத்தின் உரிமையாளர்களான தாமஸ் ஃபென் மற்றும் சக்கரியா ஜேக்கப் ஆகியோருக்கு இந்த சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளார்.
கேரளாவில் பக்தர்கள் கடவுளாகக் கருதும் தெய்யோமின் படம் உணவுப் பொட்டலத்தில் பயன்படுத்தப்பட்டது என்றும் அது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், உணவுப் பொட்டலங்களிலிருந்து கடவுளின் படங்களை அகற்றுமாறும் உணவகத்தின் நிர்வாகத்திடம் ஏற்கெனவே கேட்டதாகவும், ஆனால் உணவகத்தின் நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் நம்பியார் கூறினார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?