மு.க.அழகிரி பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என பாஜக தமிழக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்
திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த மு.க.அழகிரி 2014 ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், அதன்பிறகு நேரடி அரசியலில் பங்கேற்காமல் இருந்தார் அழகிரி, அவ்வப்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசிவருகிறார். இதற்கிடையே தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.
கருணாநிதி பெயரில் இந்த அமைப்பு அல்லது கட்சி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மு.க.அழகிரி பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக பாஜக தமிழக தலைவர் முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மு.க.அழகிரி பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்தார்.
இது குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய அழகிரி, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரிக்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசித்து பின்னர் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!