தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் - காங்கிரஸ்

Congress-speak-about-2021-tn-election

சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது


Advertisement

சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. கூட்டணி தொடர்பான பணிகளையும் கட்சிகள் தொடங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள தமிழக காங்., பொறுப்பாளர் குண்டுராவ், கள எதார்த்தத்தின் அடிப்படையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும்.

image


Advertisement

எதார்த்த அணுகுமுறையின்படி நேர்மையாக வெளிப்படையாக பேச்சு நடத்தப்படும். பேச்சுவார்த்தை நடத்தி தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்

பீகாரில் காங்கிரஸ் கட்சி மிகக்குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அதன் தாக்கம் தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது இந்த விளக்கத்தை காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

2011 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement