பாக்., சிறையிலிருந்து வெளிவந்த 70 வயது இந்தியர்: குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி சந்திப்பு!

70-Year-Old-Man-Shamsuddin-Meets-Family-In-Kanpur-After-Years-In-Pakistan

உளவுபார்த்த குற்றச்சாட்டில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த 70 வயதான  சம்சுதீன், பல ஆண்டுகளுக்குப் பிறகு கான்பூரில் தனது குடும்பத்தினரை சந்தித்தார்.


Advertisement

image

ஞாயிற்றுக்கிழமை காலை உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கி-மொஹலில் உள்ள தனது வீட்டை ஷம்சுதீன் அடைந்தார், அங்கு அவரது குடும்பத்தினரும் மக்களும் அவரை மாலைகளுடன் வரவேற்றனர். உளவுபார்த்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் சிறையில் பல வருடங்கள் கழித்து வீடு திரும்பிய 70 வயதான சம்சுதீனுக்கு  தனது குடும்பத்தினரை கண்டதும் கண்ணீரை அடக்க முடியவில்லை. "வீட்டிற்கு வந்ததும் அவரது குடும்ப உறுப்பினர்களைத் தழுவியபின், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் அழுதார், பாகிஸ்தானுக்குச் சென்றதன் மூலம் தான் ஒரு பெரிய தவறு செய்தேன் என்று கூறினார்" என்று வட்ட அலுவலர் திருபுராரி பாண்டே கூறினார்.


Advertisement

பாகிஸ்தானில் குடியேறியவர்கள் நன்றாக நடத்தப்படுவதில்லை என்றும், இந்தியர்களை "எதிரிகள்" என்றே அவர்கள் நினைப்பதாகவும் சம்சுதீன் செய்தியாளர்களிடம் கூறினார். 90 நாள் வருகை விசாவைப் பெற்று 1992 ஆம் ஆண்டு தெரிந்தவருடன் சம்சுதீன் பாகிஸ்தானுக்குச் சென்று, 1994 ஆம் ஆண்டு நாட்டின் குடியுரிமை பெற்ற பின்னர் அங்கு குடியேறினார். அவரை பாகிஸ்தானுக்கு எதிராக உளவு பார்த்ததாக  அந்நாட்டு அரசு 2012 இல் கைது செய்து கராச்சியில் உள்ள சிறையில் அடைத்து வைத்தது. இந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி அட்டாரி-வாகா எல்லை வழியாக ஷம்சுதீன் இந்தியாவை அடைந்தார், கோவிட்-19 தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர் ஊர்திரும்பியதும், பஜாரியா காவல் நிலையத்தில் வட்ட அலுவலர் திருபுராரி பாண்டே அவரை மாலைகளுடன் வரவேற்று இனிப்பு வழங்கினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement