கடந்த ஆண்டு யோகி பாபு நடிப்பில் வெளியான தர்மபிரபு படத்தின் இயக்குநர் முத்துக்குமரனின் அடுத்தப் படமான சலூன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் யோகி பாபு. இப்படத்தின் நாயகனாக சிவாவும், காமெடியில் யோகிபாபுவும் கலக்கவிருக்கிறார்கள்.
ரஜினி, விஜய், அஜித் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கிய யோகி பாபு, கடந்த ஆண்டு வெளியான தர்மபிரபு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எமன் வேடத்தில் நடித்து சாதியவாதிகள், மதவாதிகள், கந்துவட்டிக் கொடுமைக்காரர்கள் போன்றோர்களுக்கெல்லாம் தண்டனைக் கொடுத்து தெறிக்கவிட்டிருப்பார். ’தர்ம பிரபு’ தரமான படைப்பு என்று பாராட்டுக்களைக் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் முத்துக்குமரனின் அடுத்தப்படம் எப்போது என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ’சலூன் எல்லா மயிரும் ஒன்னுதான்' என்று பெயரிடப்பட்டுள்ள, இப்படத்தின் தலைப்பு பலராலும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
'குற்றம் 23', 'தடம்' வெற்றிப்படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் - தி சினிமா பீப்பிள் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபிரபு படத்தில் இயக்குநர் முத்துக்குமரனோடு யோகிபாபுவும் வசனங்கள் எழுதியிருந்தார். ஆனால், இப்படத்தில், கதை, திரைக்கதை, வசனம். இயக்கம் அனைத்தும் முத்துக்குமரன்தான். தர்மபிரபு படத்தைப்போலவே முழுக்க முழுக்க காமெடி படமான சலூன் வரும் ஜனவரியில் படப்பிடிப்பைத் துவங்கி கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!