கனமழை: "பழைய கட்டடங்களில் தங்காதீர்!" - பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரிக்கை

Disaster-Management-Authority-to-tamilnadu-people-due-to-heavy-rain

"கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பழைய கட்டடங்களில் தங்குவதோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம்" என்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரித்துள்ளது.


Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை திங்கள்கிழமை வெளியிட்ட எச்சரிக்கைக் குறிப்பில், 'தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றைக் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

பழைய கட்டடங்களில் தங்குவதோ அல்லது அவற்றுக்கு அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ அல்லது கடந்து செல்லவோ வேண்டாம்.


Advertisement

image

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், இடி - மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது; மரத்தின் அடியில் நிற்க கூடாது; திறந்தவெளியில் இருக்கக் கூடாது; நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது' என்று தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே, குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக 12 மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement