திரிபுராவை சேர்ந்த இரண்டு பெண்கள் அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வைத்து ஆறு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயாரை பார்த்துவிட்டு ஊர் திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளனர் போலீசார். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
“சம்பவத்தன்று சகோதரிகள் இருவரும் சில்சாரில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் இருந்து வாடகை காரில் திரிபுராவுக்கு திரும்பியுள்ளனர். அப்போது கரீம்கஞ்ச் மாவட்டத்திற்குள் வந்ததும் அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் சகோதரிகள் இருவரையும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்குள் வலுக்கட்டாயமாக கூட்டி சென்றுள்ளார். அவருக்கு மற்றொரு நபர் உதவியுள்ளார்.
அந்த கட்டடத்தில் அவர்களது வருகைக்காக காத்திருந்த மேலும் நான்கு பேர் சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்த மொபைல் போன், பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த புகார் எங்கள் கவனத்திற்கு வந்ததும் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரை தேடி வருகிறோம்” என தெரிவித்துள்ளார் எஸ்.பி மயங்க் குமார்.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் தற்போது மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’